
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து சமீபத்தில் விலகிய கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கோவை கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. தமிழக வெற்றி கழகத்தில் பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். அரசியல் கட்சியில் இணைந்து மக்கள் சேவையாற்ற விரும்பினால் பாஜகவில் இணையலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். மதிமுக தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.