
சென்னை: மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று சவுக்கடி கொடுத்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடந்தது.