
இந்தாண்டு ஐ.பி.எல். சீசனின் அனைத்து போட்டிகளும் ராஜஸ்தான் அணிக்கு முடிவடைந்துவிட்டன. 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது ராஜஸ்தான் அணி.
ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்து, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது ராஜஸ்தான் அணி.
ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தற்போது கேரளத்திற்கு விரைந்திருக்கிறார்.
அங்கு தனது சினிமா நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார் சஞ்சு சாம்சன்.
சஞ்சு சாம்சன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மலையாள சினிமாவிலிருந்து சில நண்பர்களும் இருக்கிறார்கள்.
அவருடைய சினிமா நண்பர்கள் லிஸ்டில் டோவினோ தாமஸ், பேசில் ஜோசஃப் ஆகியோரின் பெயர்கள் முக்கியமானவையாக இருக்கும்.
அதிலும் பேசில் ஜோசஃபும், சஞ்சு சாம்சனும் நெருக்கமான நண்பர்கள் என்றே சொல்லலாம்.
சமீபத்தில்கூட பேசில் ஜோசஃபின் ‘பொன்மேன்’ திரைப்படத்தைப் பற்றி சஞ்சு சாம்சன் பேசியிருந்தார்.
இன்று தனது சினிமா நண்பர்களுடன் பேசில் ஜோசப் பின் வீட்டில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார். திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் பேட்டிங் ஆட, சஞ்சு சாம்சன் பவுலிங் செய்கிறார்.
பேசில் ஜோசஃப் பீல்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டு சஞ்சு சாம்சன் பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா எடுத்திருக்கிறார்.