• May 22, 2025
  • NewsEditor
  • 0

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாகச் செயல்பட்ட சீசன்களில் ஒன்றாக இந்த 18-வது சீசன் அமைந்திருக்கிறது.

2008 முதல் 2019-ம் ஆண்டு சீசன் (2016, 2017 தடைக் காலம்) வரை தொடர்ச்சியாக ஆடிய 10 சீசன்களிலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணியான சி.எஸ்.கே, முதல்முறையாக 2020-ம் ஆண்டு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் 7-வது இடத்தைப் பிடித்தது.

அடுத்த சீசனிலேயே சாம்பியன் பட்ட வென்ற சென்னை அணி, 2022-ல் 9-வது இடம், 2023-ல் மீண்டும் சாம்பியன், 2024-ல் 5-வது இடம் என, 2020 முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

சிஎஸ்கே வீரர்கள்

இவ்வாறிருக்க, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாகத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறது சி.எஸ்.கே.

நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியடைந்து வெறும் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

மீதமிருக்கும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலுமே கடைசி இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு முன்னேறுவது கடினம்.

அஸ்வின் - தோனி
அஸ்வின் – தோனி

இந்த சீசனில் சென்னை அணியின் இத்தகைய மோசமான செயல்பாட்டுக்கு ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், துபே, அஸ்வின், தோனி எனப் பட்டியல் நீள்கிறது.

குறிப்பாக, இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறலாம் என நெட்டிசன்கள் தாண்டி முன்னாள் வீரர்களே வெளிப்படையாகப் பேசினர்.

அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தான் தோனியாக இருந்தால் இதுவே போதும் என்பேன் என தோனியின் ஓய்வு குறித்து பலரும் முன்வைக்கும் கருத்துக்களை எதிரொலித்திருக்கிறார்.

ESPN Cricinfo-ல் பேசிய சஞ்சய் பங்கர், “43 வயதில் இத்தகைய போட்டி நிறைந்த சூழலில் விளையாடுவது கடினம்.

இப்படியான சூழலைக்கூட விடுங்கள், இந்த வயதில் நீங்கள் லோக்கல் கிரிக்கெட் ஆடினால்கூட அது உடம்புக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது தெரியும். இதெல்லாம், தோனியைப் பொறுத்தது.

ஆனால், நான் தோனியாக இருந்தால், இதுவே போதும் என்று கூறுவேன். எனக்கு என்ன வேண்டுமோ அதை நான் விளையாடிவிட்டேன்.

சஞ்சய் பங்கர்
சஞ்சய் பங்கர்

அணியின் நலன்தான் நோக்கமாக இருந்தால், உங்களுக்கே தெரியும் விலக வேண்டும். அதற்கு அனுமதிக்க வேண்டும்.

அங்கு இருப்பதன் மூலம், மாற்றம் வேகமாக நடக்கும் என்று நினைத்தால் ஒருபோதும் அது சிறந்த நேரமாக கிடையாது.

அதற்கு, இப்போது வெளியேறினாலும் அணி தானாகவே வளரும் என்ற உண்மையுடன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

இதற்கு வருடம் கூட ஆகலாம். ஆனால், முழு சுழற்சிக்கும் நான் அங்கு இருக்கப் போவதில்லை. தோனியின் நிலைமையை நான் அப்படித்தான் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *