
பிகானிர்: பாகிஸ்தானுடன் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதிபடத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் 3 முக்கிய கொள்கைகளை இந்தியா நிறுவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானின் பிகானிரில் ரூ. 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அப்பாவி உயிர்களைக் குறிவைத்தனர். பஹல்காமில் குண்டுகள் சுடப்பட்டாலும், அவை 140 கோடி இந்தியர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியுடன் நாட்டை ஒன்றிணைத்தது.