• May 22, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 1,240 படுக்கைகள் உள்ளன.

உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்காக ‘ரெனால்ட் நிசான் டெக்னாலஜி’, ‘பிசினஸ் சென்டர் இந்தியா’ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அமைப்பு கடந்த 2022 -23ல் அமைக்கப்பட்டது.

மேலும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தானியங்கி பிளான்ட் என்.எல்.சி., நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்தும் கடந்த  2021-22 இல் ஒரு பிளான்ட் அமைக்கப்பட்டது.

இவற்றில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிளான்டில் இருந்து பகலில் உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது.

ஆக்சிஜன் பிளான்ட்

இரவில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 21-ம் தேதி உள்நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளையில் 25 நிமிடங்கள் தடை ஏற்பட்டது.

இதையடுத்து செலியர்கள், மருத்துவர்கள் சுதாரித்து ஆக்ஸிஜன் பிளான்ட்டின் வால்வு அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டறிந்து சரிசெய்து விநியோகம் சீரமைக்கப்பட்டது,

போலீஸார் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிப் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், திரவ ஆக்ஸிஜன் பிளான்ட் அமைந்துள்ள பகுதிக்கு ஒருவர் சென்று வந்தது தெரிய வந்தது.

போலீஸாரின் விசாரணையில் அவர், மல்லாங்கிணறுவைச் சேர்ந்த சரவணக்குமார்  என்பதும், ஆக்ஸிஜன் பிளான்ட் பராமரிப்பாராகப் பணிபுரிந்ததும் தெரிய வந்தது.  

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஒப்பந்த நிறுவனத்தால் நீக்கப்பட்ட 132 ஊழியர்களில் இவரும் ஒருவர் என்பது தெரிந்தது. அவர் வேலையிழந்ததால் மனவேதனையில் ஆக்ஸிஜன் பிளான்ட் வால்வை அடைத்தது தெரிந்தது.

விருதுநகர் அரசு மருத்துவமனை
விருதுநகர் அரசு மருத்துவமனை

நிலைய மருத்துவ அலுவலரான மருத்துவர் கணேஷ், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார், சரவணகுமாரைக் கைது செய்ததுடன் அவர் மீது குற்றவியல் அத்துமீறல், தமிழ்நாடு மருத்துவ சேவை நபர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு தடுப்பு) சட்டம் – 2008 இன் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிய நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் கவனித்ததால் சில நிமிடங்களிலேயே மீண்டும் ஆக்சிஜன் வால்வு திறக்கப்பட்டு, பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன் பெரும் உயிர் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *