
பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியிருக்கிறார். ‘அனிமல்’ படத்துக்குப் பின் சந்தீஷ் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படம் உருவாக இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். பின்பு இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.