
புதுடெல்லி: சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க, தேர்வு செய்யப்பட்ட 33 நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் பாக். தீவிரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.