• May 22, 2025
  • NewsEditor
  • 0

கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது சான்றிதழ் படிப்புகள். தங்களின் பிரதான டிகிரியுடன் சான்றிதழ் படிப்பு ஒன்றையும் சேர்த்து படித்தால், எளிதில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய சான்றிதழ் படிப்புகளை பற்றி அறிந்துகொள்ள கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

சான்றிதழ் படிப்புகள் குறித்து பேசிய அவர், ” ‘கலை & அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பைனான்சியல் டெக்னாலஜி சார்ந்து நிறைய சான்றிதழ் படிப்புகள் இருக்கிறது. அதைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இந்திய மக்கள்தொகையில் 1.1 சதவிகிதம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இன்னும் நான்கைந்து வருடங்களில் இது 4 சதவிகிதமாக உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் இன்வஸ்ட்மென்ட் பேங்கிங் தொடர்பான சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் மதிப்பு இருக்கும்.

அதேபோல இன்றைக்கு எல்லாமே டிஜிட்டல் கரன்ஸியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் பிளாக் செயின் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை எடுத்துப் படித்தால் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

certificate courses
certificate courses

காமர்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் எக்செலில் 3 விதமான படிப்புகள் இருக்கின்றன. அதைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இவற்றையெல்லாம் விட ஜெர்மனி, ஜப்பானீஸ், பிரெஞ்சு போன்று எதாவது ஒரு வெளிநாட்டு மொழி கற்றுக்கொள்வது நல்லது.

தவிர நிதி இடர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய Financial Risk Management என்ற ஒரு சான்றிதழ் படிப்பு இருக்கிறது. இதைத் தேர்வு செய்து படித்தால் பைனான்ஸ் தொடர்பாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அக்கவுன்ட்ஸ் சம்பந்தமாக படிக்க விரும்பும் மாணவர்கள், பிசினஸ் அக்கவுன்டிங் & டாக்சேஷன் சான்றிதழ் படிப்புகளை தேர்வு செய்யலாம். இதைவிட Forensic Accounting என்று சொல்லக்கூடிய ஒரு சான்றிதழ் படிப்பு இருக்கிறது.

certificate courses
certificate courses

எதிர்காலத்தில் இந்த சான்றிதழ் படிப்பிற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சான்றிதழ் படிப்புகளை அவர்கள் படிக்கும்போது அவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல சம்பளமும் அதிகமாகக் கிடைக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *