• May 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாதவரம் ஜி.என்.டி சாலை மற்றும் சந்திரபிரபு காலனி சந்திப்பில் 900 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி, 23-ம் தேதி இரவு 10 மணி முதல் 24-ம் தேதி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. எனவே, மாதவரம் மண்டலத்தில் கடப்பா சாலை, மதனகுப்பம், ராஜீவ் காந்தி நகர், தாங்கல் கரை, புத்தகரம், பத்மாவதி, வீனஸ் நகர் உள்ளிட்ட உந்து நிலையங்கள் செயல்படாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *