
புதுடெல்லி: மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.