
சென்னை: அடையாறு சீரமைப்பு பணிக்கான அரசின் மறுகுடியமர்வு திட்டத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையாறு நதியை சீரமைக்க ரூ.1500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.