• May 22, 2025
  • NewsEditor
  • 0

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது 6E2142 என்ற இண்டிகோ விமானம். அந்த விமானத்திலிருந்து பயணிகளில் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.

அந்த வீடியோவில், திடீரென விமானம் அதிருவதும், அதனால் பயணிகள் அலறி அழும் சப்தத்தையும் கேட்க முடிகிறது.

இந்த வீடியோ தொடர்பாக விளக்களித்திருக்கும் விமான நிறுவனம், “டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142 செல்லும் வழியில் திடீர் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

சூழலை புரிந்துகொண்ட விமானி உடனே ஸ்ரீநகரில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு அவசரநிலை குறித்துத் தெரிவித்தார்.

அவர்களின் முழுக் கண்காணிப்பின் கீழ் 227 பயணிகளுடன் விமானம் மாலை 6.30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. அதற்குப் பிறகு பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு விமானம் மீண்டும் பயணத்தை தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *