
நடிகை சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா'. இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். மலையாளத்தில் ‘லூசிஃபர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“இதில் சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தினர் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர்.