
‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 'நாயகன்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம், 'தக் லைஃப்'. இதில் சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது கமல் பேசியது: “தக் லைஃப் படம் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும். இது ஒரு பரிசோதனை கூட அல்ல. இது ஒரு நடைமுறை விஷயம். ஓடிடி தளம் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.