• May 21, 2025
  • NewsEditor
  • 0

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய ‘ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்’ என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான ‘ஹார்ட் லேம்ப்’ என்ற சிறுகதை தொகுப்புகள் 2025 சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது.

கன்னட மொழியில் இருந்து புக்கர் பரிசை பெரும் முதல் எழுத்தாளராக பானு முஷ்டாக் திகழ்கிறார்.

‘ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்’ என்ற புத்தகத்தை பானு முஸ்டாக் கன்னடத்தில் எழுதினார், அதனை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி என்பவர் மொழிப்பெயர்த்து ‘ஹார்ட் லேம்ப்’ என வெளியிட்டார். இந்த பதிப்பு தான் சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளது.

மொழிபெயர்ப்பாளரான தீபா பாஸ்தி மற்றும் பானு முஷ்டாக் இருவரும் இணைந்து சர்வதேச புக்கர் பரிசை, லண்டனில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டனர்.

தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் எழுதப்பட்ட கதை தான் இது!

தனது இருபதுகளின் பிற்காலத்தில் இருந்து எழுத தொடங்கிய முஷ்டாக் ஒரு வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும் தனது அனுபவங்களில் இருந்து சமூக, மத மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் பெண்களின் போராட்டங்களை இதில் விவரிக்கின்றார்.

1990 முதல் 2023 வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானத்துடன் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான ’ஹார்ட் லாம்ப்’ இந்த சர்வதேச புத்தர் விருதை வென்றுள்ளது.

இதன் மூலம் எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கும், மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்திக்கும் 50,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.48 லட்சம்) பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், கீதாஞ்சலிஸ்ரீ மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோரின் ஹிந்தி நாவலான ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ இந்தியா சார்பில் முதலாவது புக்கர் பரிசை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பானு முஷ்டாக்?

1948 ஆம் ஆண்டு கர்நாடாகவில் உள்ள ஹாசனில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் பானு முஸ்டாக். இவர் சிறு வயதிலிருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

பானு எட்டு வயதில் சீமக்காவில் உள்ள ஒரு கன்னட மொழிப் பள்ளியில் கன்னடத்தைப் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

இவருக்கு கன்னடம், இந்தி, தக்னி உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசத்தெரியும். ஆரம்பத்தில் பானு லங்கேஷ் பத்திரிகே (Lankesh Patrike) செய்தித்தாளில் செய்தியாளராக பணியாற்றி இருந்திருக்கிறார். சில மாதங்கள் பெங்களூருவில் உள்ள அனைத்திந்திய வானொலியில் பணியாற்றி இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *