
புதுடெல்லி: "வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பார்கள்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், ‘தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (மே 21) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.