
சென்னை: “கடந்த பத்தாண்டுகளில் பெரும் குழும நிறுவனங்களுக்கு ரூபாய் 25 லட்சம் கோடியை தள்ளுபடி செய்து ஆதரவு காட்டும் ரிசர்வ் வங்கி, உழைக்கும் மக்களின் நகை கடன் பெறும் உரிமையை பறிக்கும் வகையில் போட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்க நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி கடுமையான நிபந்தனைகளை அறிவித்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை, சிறு, குறு விவசாயிகள் முதல் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் வரை பெரும்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவசரத் தேவைக்கு தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து கடன் பெறுவது பெறும் உதவியாக இருந்து வருகிறது. இப்படி பெறப்படும் கடனுக்கான வட்டித் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தி விட்டு, கடனை அப்படியே புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்து வருகிறது.