
மும்பை: "பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட விரும்பும் பெருமைமிக்க இந்தியர்களான நாங்கள் செல்கிறோம். நாங்கள் கட்சியின் சார்பாகப் போகவில்லை. இந்தியா சார்பாக மற்ற நாடுகளுக்குச் செல்கிறோம்" என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி, சுப்ரியா சுலே உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவினர் பிரிட்டன், ஆப்ரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.