
சென்னை: ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும், என போக்குவரத்து போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகத்தில் சாலைகளில் செல்லுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.