
ஐஸ்வால்: உல்லாஸ் (ULLAS – Understanding Lifelong Learning for All in Society) முன்முயற்சியின் கீழ் மிசோரம் அதிகாரபூர்வமாக முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
மிசோரம் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் மிசோரம் கல்வி அமைச்சர் டாக்டர் வன்லால்த்லானா ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மிசோரம் முதல்வர் லால்துஹோமா, "இன்று நமது மாநிலத்தின் பயணத்தில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது. நமது மக்களின் கூட்டு விருப்பம், ஒழுக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு மாற்றத்திற்கான மைல்கல் இது.