• May 21, 2025
  • NewsEditor
  • 0

மலையாள திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ‘எம்புரான்’ மற்றும் ‘தொடரும்’ ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து மோகன்லாலின் பெருமையை தக்கவைத்திருக்கிறது.

அந்த மலையாள சேட்டனுக்கு இன்று (மே 21) 65-வது பிறந்தள். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மோகன்லால்

இந்த நிலையில், மோகன்லால் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்புள்ளவரே, எனது பிறந்தநாளில் மிகுந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பானு பிரகாஷ் எழுதிய எனது வாழ்க்கைக் கதை ‘Mukharagam’ என்றத் தலைப்பில் புத்தகமாக வெளியாகிறது.

இந்த புத்தகத்தை, மாத்ருபூமி பதிப்பகம் வெளியிடுகிறது. மலையாளத்தின் என் விருப்பமான எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அதில் முன்னுரை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் 47 வருட எனது சினிமா வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. எனது வாழ்க்கையை வார்த்தைகளாக எழுதி மொழிபெயர்க்க பானு பிரகாஷ் மேற்கொண்ட முயற்சிகள் மிகப் பெரியது. இந்த புத்தகம் டிசம்பர் 25, 2025 அன்று வெளியிடப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோகன்லால் – Mohanlal

மேலும், அவரின் அந்த வீடியோவுடன் சிலப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார். அதில், “விஸ்வசந்தி அறக்கட்டளை” ஒரு ஹீரோவாக இருங்கள்” என்ற தலைப்பில் ஒரு வருட கால போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கிறது. எனவே, கனவு காண்பதும் வெற்றிகரமான வாழ்க்கையை அடைவதும் ஒருவர் பெறக்கூடிய மிகப்பெரிய உயரமாகும்.

போதைப்பொருளுக்கு எதிரான இந்த பயணத்தில் நமது இளைஞர்களுடன் நாம் உறுதியாக இருப்போம். போதைப்பொருட்களுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு ஹீரோவாக இருப்போம்.

அதைப் பயன்படுத்த மாட்டோம், நம் அன்புக்குரியவர்களும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம். போதைப்பொருட்களுக்கு நோ சொல்லுங்கள்..!!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *