
சென்னை: வீடுகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இருக்காது. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின்வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 2022-ல் மின்கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது.