
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா மேம்பட்டு வந்த நிலையில் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, பாக். தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போர் 4 நாட்கள் நீடித்தது. அதன்பின் இரு நாடுகள் இடையே கடந்த 10-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.