• May 20, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் யானை கண்டறியப்பட்டது. அருகிலேயே அதன் குட்டி யானை பரிதவிப்புடன், தாய் யானையை எழுப்ப முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

யானைகள்

குட்டி யானை வனப்பகுதிக்கு சென்ற நிலையில், தாய் யானைக்கு கடந்த மே 17-ம் தேதி முதல் வனத்துறை மருத்துவக் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

கும்கி யானை மற்றும் கிரேன் உதவியுடன் வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதில், யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் வனத்துறை கூறியிருந்தது. 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானைக்கு 100க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன.  நான்காவது நாளான இன்று அந்த யானைக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக ஹைட்ரோ தெரஃபி மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

ஹைட்ரோ தெரஃபி சிகிச்சைக்காக, வனப்பகுதியில் தற்காலிக குட்டை அமைத்து அதில் 18,000 லிட்டர் தண்ணீர் நிரப்பினர். பிறகு பொக்லைன் மூலம் யானை குட்டையில் இறக்கி சிகிச்சையளிக்கப்பட்டது. குழாய்கள் மூலம் யானையின் உடலில் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், அந்த பெண் யானை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது. “யானைக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்றோம். நாளை பிரேத பரிசோதனை செய்த பிறகே யானையின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும்.” என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *