
ஹோசபேட்(கர்நாடகா): பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு செய்ய நினைக்கிறது. இதுபோன்ற விஷயங்களை நம் நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. நாங்கள் இதில் ஒன்றுபட்டுள்ளோம். நாட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு ஆதரவை வழங்கினோம். நாடு முக்கியமானது. அதற்குப் பின்னர்தான் மதம், சாதி உள்ளிட்ட விஷயங்கள்.