
பாலை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டல் செய்யலாம், அதை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து நேரடி செயல் விளக்க பயிற்சி மே 23ம் தேதி சென்னை அடுத்த அலமாதியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பசுமை விகடன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சியில் ஐஸ் க்ரீம், பனீர், பால் க்ரீம், ரோஸ் மில்க், பாதாம் பால் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து நேரடி பயிற்சி நடைபெற உள்ளது.
வருகிற வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. ஒரு பொருளை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்புக் கூட்டும்போது அதைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. அதன் செல்ப் லைப்பும் அதிகமாகிறது. இதை லாபகரமாக எப்படி செய்வது, என்னமாதிரியான யுக்திகளை கையாள வேண்டும் என்பதற்கான செயல்விளக்கங்கள் இதில் இடம் பெற உள்ளன.
குறைந்த முதலீட்டில் ஐஸ் கிரீம் தயாரிப்பதற்கான வழிமுறைகள், பனீர் தயாரிப்பு பற்றிய செயல்முறைகள் ஆகியவை குறித்து கல்லூரி பேராசிரியர்கள் நேரடி விளக்கம் அளிக்க இருக்கிறாரகள். பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுக்கும் முறை (cream separator) பற்றி விளக்கம், அப்படி பிரித்து எடுக்கப்பட்ட பாலில் இருந்து பாதாம் பால், ரோஸ் மில்க் விற்பனைக்கு ஏற்றவாறு எப்படி தயாரிப்பது பற்றி செயல் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த செயல்முறையில் உங்களுக்கு எதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதற்கும் விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் இக்கல்லூரியில் உள்ள மதிப்புக் கூட்டல் செய்யும் இயந்திரங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த கல்லூரியில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள மற்றும் பிசினஸ் வழிகாட்டல் செய்வதற்கும் தேவைப்படும் பிசினஸ் இன்குபேஷன் உறுப்பினர் ஆவதற்கான வழி காட்டல்கள் இக்கல்லூரியில் உள்ள பேராசிரியர்களால் சொல்லி கொடுக்கப்படும்.

எப்படி கலந்து கொள்ளலாம்!
இந்தப் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள பயிற்சி கட்டணமாக ரூபாய் 1,200 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும், மேலும் விவரங்களுக்கு 9940022128 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், மதிய உணவு வழங்கப்படும்.
இந்த பயிற்சியானது திருவள்ளூர் மாவட்டம், அலமாதி- கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பாலவளத் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.