
புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை என்பது, வக்பு சொத்துகளை நீக்கும் அதிகாரம், வக்பு கவுன்சிலில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இடம் பெறுவது, அரசு நிலமா என்பதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது ஆகிய 3 அம்சங்கள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் இன்று (மே 20) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீதிமன்றம் மூன்று பிரச்சினைகளை குறிப்பிட்டிருந்தது. இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் நாங்கள் எங்கள் பதிலை தாக்கல் செய்திருந்தோம்.