
சென்னை: அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகாரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், "மதுரை மாவட்டம் வளையங்குளத்தில் நேற்று பெய்த கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வளையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அம்மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்தவர்கள் அடுத்தடுத்த மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.