
சென்னை: “தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்துக்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்த வழக்கில் நீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கவலையோடு பார்க்கிறது.