
சென்னை: "எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்" என ஆர்த்தி ரவி விளக்கம் அளித்துள்ளார்.
ரவி மோகன் – ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையே அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலளித்து ஆர்த்தி ரவியின் தாய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது ரவி மோகன் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி ரவி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.