
சென்னை: திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் இன்று (20.05.2025) கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அயோத்திதாச பண்டிதரின் திருவுருவப் படத்திற்கு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன், ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.