
தமிழகத்தில் தேசிய கட்சிகளைத் தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்த்தி சிதம்பரத்திடம், ‘தமிழ்நாடு அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது’ என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “இண்டி கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக இருக்கிறது, இந்த கூட்டணியில் எந்தவிதமானப் பிரச்னையும் இல்லை.
எதிரணிகளில் இருக்கக்கூடிய கூட்டணியை எடுத்துக் கொண்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, நான் எப்பொழுதுமே அவர்களின் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டது கிடையாது.
அவர்களுக்கு எல்லா காலகட்டத்திலேயும் நல்ல வாக்கு வங்கி இருந்துள்ளது. இன்னமும் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்சி தற்போது பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது.
`புதிய எனர்ஜி இருக்கிறது’
ஆனால் அடிமட்ட தொண்டர்கள் அந்தக் கூட்டணியை விரும்பவில்லை என்பதை நான் கண்கூடப் பார்க்கிறேன். அதனால் அவர்களுக்கு இது பின்னடைவாக கூட இருக்கலாம்.
அதேபோல புதிதாக துவங்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெரியவில்லை. கூட்டணி வைப்பார்களா? தனித்து போட்டியிடுவார்களா ? என்பது தெரியவில்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் விஜய்யின் கட்சிக்கு ஒரு புதிய எனர்ஜி இருக்கிறது. ஆனால் அந்த எனர்ஜி ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாக மாறி, தேர்தலை சந்தித்தால் மட்டும் தான் தெரியும்.
பாமக என்ன நிலை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் தெளிவான கூட்டணி வரவில்லை. என்னை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைகளான கூட்டணி வெற்றி பெறும் என்றுதான் நினைக்கிறேன்.
தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலும் வரத்தானே செய்கிறது. தேசிய கட்சியோடு இணைந்தால்தான் அந்த திராவிட கட்சிக்கு வாக்கு வங்கி வலுவாக இருக்கிறது. தேசிய கட்சிகளை நிராகரித்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs