• May 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வாக்​குச்​சாவடி முதல்​நிலை முகவர்​கள் பயிற்சி முகாம், டெல்​லி​யில் வரும் 22 மற்​றும் 23-ம் தேதி​களில் நடை​பெறுகிறது. இம்​மு​காமில் தமிழகத்​தில் இருந்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முதல்​நிலை முகவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். இதில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் கட்சி பிர​தி​நி​தி​களுடன் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் ஆலோசனை நடத்தினார்.

இக்​கூட்​டத்​தில், திமுக, அதி​முக, பாஜக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி, தேமு​திக, நாம் தமிழர் கட்​சி, பகுஜன் சமாஜ் கட்​சி, ஆம் ஆத்​மி, தேசிய மக்​கள் கட்சி ஆகிய 12 அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிகளை சேர்ந்த பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர். இதில் திமுக சார்​பில் எம்​.எம்​.அப்​துல்​லா, அதி​முக சார்​பில் சி.​வி.சண்​முகம்​ பங்​கேற்​றனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *