
சமூக வலைதளங்களில் ‘பெரிய பாய்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் “பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்” என்று பேச்சில் குறிப்பிட்டார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் “பெரிய பாயா?” என்று சிரித்தார்.