
புது டெல்லி: பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டி’குன்ஹா தெரிவித்தார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு லெப்டினன்ட் ஜெனரல் டி'குன்ஹா அளித்துள்ள நேர்காணலில், “முழு பாகிஸ்தானும் இந்திய ஆயுதங்களின் எல்லைக்குள் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் பொதுத் தலைமையகத்தை ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்க்வா போன்ற பகுதிகளுக்கு மாற்றினாலும், அவர்கள் ஓர் ஆழமான பதுங்குகுழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.