
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவச் செய்கிறது. மேலும் இந்தியாவில் பணத்துக்கு மயங்கும் ஆட்களை பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் ஈடுபடுகிறது.