
நடிகர் விஜய் ஆண்டனி இப்போது மார்கன், வள்ளி மயில், சக்தி திருமகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் மார்கன் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘லாயர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் 26-வது படமான இதை ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிக்கிறார்.
ஜுனில் படப்பிடிப்பு தொடங்குகிறது. நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று படக்குழு கூறுகிறது.