
பெங்களூரு: பெங்களூரில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய கன‌மழை அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சிவாஜிநகர், ஹென்னூர், கிருஷ்ணராஜாபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.