
‘லக்னோ vs ஹைதராபாத்’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையே லக்னோவைச் சேர்ந்த திக்வேஷ் சிங்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிஷேக் சர்மாவும் களத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் மிட்செல் மார்ஷ், மார்க்ரம், பூரன் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு 206 ரன்கள் டார்கெட். சன்ரைசர்ஸ் அணி சேஸிங்கை தொடங்கியது. அந்த அணியின் சார்பில் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடினார்.
திக்வேஷ் vs அபிஷேக்
18 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்தார். ரவி பிஷ்னோயின் ஓவரில் மட்டுமே தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்தார். அதற்கடுத்த ஓவரையே திக்வேஷ் சிங் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக்கின் விக்கெட்டை திக்வேஷ் வீழ்த்தினார். அபிஷேக் 20 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார்.

அவுட் ஆகிவிட்டு அவர் வெளியேறுகையில் திக்வேஷ் அவர் பாணியிலேயே ஆக்ரோஷமாகக் கொண்டாடியதோடு அபிஷேக்கை நோக்கி சில வார்த்தைகளையும் பேசினார். இதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் உண்டாகியது. இரு அணியின் வீரர்களும் நடுவர்களும் இடையே புகுந்து இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினர்.
போட்டிக்குப் பிறகு இருவருக்குமே ஐ.பி.எல் நிர்வாகத்தின் சார்பில் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
திக்வேஷ் செய்கிற அந்த செலிபிரேஷன் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.