
சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள அவர், “மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இடம்பெற்றிருந்தது. தொடக்கம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்தின் மிகச்சிறந்த எழுத்து மற்றும் இயக்கம். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி. தவறவிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.