• May 19, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சாயக்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை மாலை ஐந்து பேர் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த சாயக்கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி ஐந்து பேரும் மயக்கமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுண்டமேடு பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

பலி

மேலும், மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மது போதையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *