• May 19, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பேரணி முடிந்த பின், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மந்திரம் மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் சின்னசாமி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நயினார் நாகேந்திரனை இருவரும் சீருடையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. எனினும், காவல் துறை சீருடையுடன் சென்று பேசியதால் அவர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

இதேபோல திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் நல்லசாமி. இவர் குற்றவாளி ஒருவரின் மனைவியிடம் செல்போனில் அழைத்து தவறாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரை மாநகர காவல் ஆணையர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் 3 பேர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது திருப்பூர் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *