
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலானப் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
2014 ஆம் ஆண்டுக்குப் பின்பு பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிதான் கோப்பையை வென்று இருந்தது.
ஸ்ரேயாஸ் ஐயர்தான் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். கவுதம் கம்பீர் மென்டராக செயல்பட்டார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், “கடந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பை வென்றபோது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கவில்லை.
அனைத்துப் புகழும் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.

அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுவது கேப்டனே தவிர, ஆடுகளத்திற்கு வெளியே உட்கார்ந்திருப்பவர் அல்ல.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கிறது.
ரிக்கி பாண்டிங் இதற்குக் காரணம் என யாரும் கூறவில்லை” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…