
புதுடெல்லி: "ஆபரேஷன் சிந்தூர்" தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் அலி கான் மஹ்முதாபாத்தை ஹரியாணா போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனை, கும்பல் கொலை மற்றும் புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதுடன் ஒப்பிட்டு அசோக பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலிகான் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.