
அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் நடித்த 'போர்' படத்தை தயாரித்த ரூக்ஸ் மீடியாவின் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் அடுத்து தயாரிக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெய் இயக்கியுள்ள இந்தப் படம், இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள் ளது. நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிஜு சாம் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள் ளது.