• May 19, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்த இந்திய விவசாயிகளுக்கு ஆவணத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் கிட்டதட்ட 5 5 லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா டாப் இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது, கதிர்வீச்சுகளால் அவை சுத்தம் செய்யப்படும். இதை செய்வதன் மூலம் மாம்பழங்களில் உள்ள நுண்ணுயிரிகள், பூச்சிகள் அழிக்கப்படும் மற்றும் இது மாம்பழங்கள் அழுகுவதையும், முளைப்பதையும் தடுக்கும்.

அமெரிக்கா

இந்த நடைமுறை இந்தியாவில் இருக்கும் கதிர்வீச்சு ஆய்வகத்தில் உள்ள அமெரிக்க அதிகாரிகளின் முன்னிலையில் நடக்கும். பின்னர், அதற்கான ஆவணங்களை அந்த அதிகாரிகள் வழங்குவார்கள்.

மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது, இந்த ஆவணங்களும் அந்த மாம்பழங்களில் தரத்திற்கு சான்றாக வழங்கப்படும். மேலே கூறிய சம்பவத்தில் இங்கே தான் பிரச்னை நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்க விமான நிலையங்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறன.

ஆனால், இவற்றின் ‘ஆவணங்கள் சரியாக இல்லை’ என்று 15 மாம்பழ ஷிப்மெண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Mango

இதையடுத்து, ‘இந்தப் பழங்களை திருப்பி அனுப்புகிறோம் அல்லது இங்கேயே அழித்துவிடுகிறோம்’ என்று விவசாயிகளிடம் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பழங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் மீண்டும் செலவாகும் என்று அமெரிக்காவிலேயே அந்த மாம்பழங்களை அழிக்குமாறு விவசாயிகள் கூறியிருக்கிறார்கள்.

அந்த மாம்பழங்களை அங்கேயே அழித்தாலும் இந்த விவசாயிகளுக்கு கிட்டதட்ட 5 லட்சம் டாலர் நஷ்டம்.

இந்த சம்பவம் குறித்து Economic Times-யிடம் பேசிய சில விவசாயிகள், “நாங்கள் மாம்பழங்களை நவி மும்பையில் இருக்கும் ஒரு ஆய்வகத்தில் தான் கதிர்வீச்சு சுத்தம் செய்தோம். ஆனால், அந்த ஆய்வகத்தில் நடந்த தவறால் எங்களுக்கு நஷ்டம்” என்று வருத்தத்துடன் கூறியிருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *