
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.
அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, “திட்டமிடப்பட்டது, பயிற்சியளிக்கப்பட்டது மற்றும் முடிக்கப்பட்டது. நீதி வழங்கப்பட்டது” என்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஹேஷ்டேக்குகளாக ‘பலமான மற்றும் திறமையான’ (#StrongAndCapable) என்றும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ (#OpSindoor) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர், “இது அனைத்தும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தொடங்கியது. எங்களுடைய கோபம் உருகிய எரிமலை போல உள்ளது.
அந்த நேரத்தில் ஒரே ஒரு சிந்தனை தான் ஓடிக்கொண்டிருந்தது. அது, ‘அவர்கள் தலைமுறைகள் மறக்காதாவறு பாடம் கற்றுத்தர வேண்டும்’ என்பது தான்.
இது பழிவாங்கு நடவடிக்கை அல்ல, இது நீதி. மே 9-ம் தேதி இரவு, இரவு 9 மணியளவில் போர் நிறுத்தத்தை மீறிய அனைத்து எதிரி படைகளும் அழிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் வெறும் நடவடிக்கை அல்ல; பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கற்றுகொடுக்கப்படாத ஒரு பாடம் ஆகும்” என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோ இதோ…
Planned, trained & executed.
Justice served.@adgpi@prodefencechan1 pic.twitter.com/Hx42p0nnon
— Western Command – Indian Army (@westerncomd_IA) May 18, 2025