
ஹிசார்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குசாலா, யமீன், தேவிந்தர் அர்மான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர் உளவாளி கும்பலின் தலைவராக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் கூறியதாவது: ஹரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தச்சு தொழிலாளி ஆவார். மிகச் சிறிய வீட்டில் ஏழ்மையான சூழலில் வளர்ந்த ஜோதி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.