
‘வாடிவாசல்’ படத்தின் எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
நீண்ட வருடங்களாக சூர்யா – வெற்றிமாறன் இணைப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு, சூர்யா மற்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளனர். அதற்கான முதற்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.